இளம்பெண்களுக்கு முகத்தில் வரும் தேவையற்ற முடிகளை நீக்க குப்பைமேனி
இளம்பெண்களுக்கு முகத்தில் வரும் தேவையற்ற முடிகளை குப்பைமேனியைக் கொண்டு நீக்கலாம்.குப்பைமேனி இலைகளை10 வீதம் எடுத்து, விரலி மஞ்சளை சேர்த்து அரைத்து, இரவு தூங்கும்போது முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். மறுநாள் காலை உலர்ந்து, அவை முடியோடு உதிர்ந்து வெளியேறும். மேலும் இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடி உதிர்வதைப் பார்க்கலாம்.
குப்பைமேனி இலையுடன் கற்றாழை சாறு கலந்து இரண்டையும் மசித்து, சிட்டிகை மஞ்சள் சேர்த்து பின் முகப்பருக்கள் இருக்கும் இடங்களில் பற்று போட வேண்டும். அவை உலர்ந்ததும் முகத்தை நீரில் கழுவினால் முகத்தில் பருக்கள் குறைய தொடங்கும்.
0
Leave a Reply