25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும்

தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக,,பலரும் பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது.இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் 

பாகற்காய் ஜூஸ்

உங்களுக்கு சரியாக பசி எடுப்பதே இல்லை,உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.

வேப்பிலை ஜூஸ்

வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ். உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று

கேரட் ஜூஸ்

நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.

சுரைக்காய் ஜூஸ்

உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை சரும அழகை அதிகரிக்க ,உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கற்றாழை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News