ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது...
பாயாசம் கேசரி போன்றவை செய்யும் போது அரிசி ரவை வெந்த பிறகு தான் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
தயிர் பச்சடி நீர்த்து விட்டால் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக்கி கலந்து விட்டால் தயிர் பச்சடி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
டீ, காபி குடிக்கும் கப்பில் படிந்துள்ள கரையை நீக்க ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி கறை உள்ள இடத்தில் தேய்த்து கழுவ கறை போகி விடும்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதனுடன் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தால் ஆப்பம் நல்ல மெத்து மெத்தென மென்மையாக இருக்கும்.
முட்டையை பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொள்வது நல்லது.
0
Leave a Reply