25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


சமையல் அறை சுத்தமாக இருக்க..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமையல் அறை சுத்தமாக இருக்க..

காஸ் அடுப்பு மற்றும் சமையல் மேடையில், திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து, ஊற விடவும். அதன் பின் தண்ணீர் ஊற்றி துடைத்தால், எண்ணெய் பிசுக்கு அகன்று விடும்

கண்ணாடி பாட்டிலில் வீசும் துர்நாற்றம் போக்க, அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை கடுகு அல்லது சோடா உப்பு போட்டு குலுக்கி, ஊற வைத்து கழுவலாம்.

 சமையல் அறையில், எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருக்கும். டைல்சை சாதாரண துணியால் துடைத்த பின், + வெதுவெதுப்பான நீரில் சலவை சோடாவை கலந்து, பிசுக்கு உள்ள இடங்களில் பூசி, உலர்ந்த துணியால் துடைத்தால், 'பளிச்'சென மின்னும். 

மின்சார அடுப்பில் பால் போன்றவற்றைக் கொதிக்க வைக்கும்போது.அடுப்பின் மீது அவை கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அடுப்பை தொட்டாலோ அல்லது ஓர் உலோகக் கரண்டியால் பாலைக் கிளறினாலோ கடுமையான மின்சார.ஷாக்' அடிக்க வாய்ப்புள்ளது.

பாத்திரங்களை அலம்பும் நீரில், அவ்வப்போது சிறிது வினீகரை கலந்து கழுவினால், பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும் கைகளும் மென்மையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News