அசைவம் சமைத்த பாத்திரங்களில் வாசனை போக....
துணிகளில் பட்ட எண்ணெய் மற்றும் கிரீஸ் கரைகள் எளிதில் போகாது இந்த கறைகளை போக்க துணியில் சிறிது நீலகிரி தைலத்தை தேய்த்து கசக்கினால் கரை மறையும்.
அசைவம் சமைத்த பாத்திரங்களில் ஒரு வித வாசனை வரும். அந்த வாசனை போக வேண்டுமானால் சிறிதளவு புளியை தேய்த்து பின்னர் சோப்பில் கழுவ வேண்டும்.
மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடு சில சமயங்களில் டைட்டாக ஆகிவிடும். இதை கழட்டுவதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை பிளேடு மூழ்கும் வரை ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, கழட்டினால் ஈசியாக கழட்டி விடலாம்.
கலங்கலாக இருக்கும் சுட்ட எண்ணெயில், உருளைக்கிழங்கை நான்கைந்து வில்லைகளாக நறுக்கிப் போட்டு பொரித்து
எடுத்தால், எண்ணெய் துாய்மையாகி, மீண்டும் உபயோகிக்க முடியும்.
'நான் - ஸ்டிக்' தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சுகியனை போட்டு மூடி சிம்மில் வைக்கவும். வெந்ததும் திருப்பிப் போடுங்கள். சுவையில் சிறிதும் குறையாத, எண்ணெயில்லாத சுகியம் ரெடி.
0
Leave a Reply