25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கோபி மஞ்சூரியன்  ( காலிஃபிளவர் மஞ்சூரியன் )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோபி மஞ்சூரியன்  ( காலிஃபிளவர் மஞ்சூரியன் )

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் - 1 நடுத்தர அளவு

மைதா - கால் கப்

சோள மாவு (corn flour) - 3 டேபிள்ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

மிளகு தூள் - கால் டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சோயா சாஸ்

மிளகாய் சாஸ்

வினிகர்

எண்ணெய் (பொரிப்பதற்கு) 

செய்முறை:

காலிஃபிளவரை சூடான நீரில் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், மைதா, சோள மாவு, மிளகாய் தூள், மிளகு தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவாக கலந்து கொள்ளவும்.

இந்த மாவில் காலிஃபிளவர் பூக்களைப் போட்டு, மசாலா நன்றாகப் படும்படி கலந்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காலிஃபிளவர் கலவையை பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

மற்றொரு கடாயில், எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்னர், சோயா சாஸ், மிளகாய் சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.

வறுத்த காலிஃபிளவர் பூக்களை இந்த சாஸில் சேர்த்து, சாஸ் எல்லா இடங்களிலும் படும்படி கிளறவும். சுவையான கோபி மஞ்சூரியன் தயார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News