பக்கோடா கரகரப்பாக இருக்க…
சுவையான ஜவ்வரிசி காராபூந்தி செய்ய ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனுடன் சிறிது மிளகாய் துாள், பெருங்காயத்துாள், தேவையான அளவு உப்பு, மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த சுவை அருமையாக இருக்கும்.
பக்கோடா தயாரிக்கும் முன், பேசினில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களால் நன்றாக நுரைக்க தேய்க்கவும். அதன்பின், கடலைமாவு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து எண்ணெயில் உதிர்த்துப் போட்டால், பக்கோடா கரகரப்பாக இருக்கும்.
பச்சரிசி - நான்கு ஆழாக்கு, பாசிப்பருப்பு -இரண்டு ஆழாக்கு எடுத்து வெறும் வாணலியில் வறுத்து, இரண்டும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள, காராசேவ், ரிப்பன், தேன்குழல், பக்கோடா, பஜ்ஜி என, எதுவேண்டுமானாலும் செய்யலாம். மாவை கரைத்து, சீரகம்,மிளகு, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தோசையும் வார்க்கலாம்.
குலாப் ஜாமூன்பொரித்த எண்ணெயில் சிறு சிறு துண்டுகளாக பிரட்டைப் பொரித்து எடுத்து, பரிமாறும் கிண்ணங்களில் பிரட் துண்டுகளை போட்டு, அதன் மேல், ஜாமூன்களை வைத்து கொடுக்க, அதிகபடியான ஜீராவை பிரட் உறிஞ்சிக் கொள்ளும். அந்த பிரட் துண்டுகளை தனியாகவே சாப்பிடலாம்.
பலகாரங்கள் செய்வதற்கு அரிசி மாவு மற்றும் இதர மாவு வகைகளை மெஷின் அல்லது மிக்ஸியில் அரைத்ததுமே பயன்படுத்தாமல், நன்றாக சூடு ஆறியதும் உபயோகிக்கவும்.
0
Leave a Reply