வித்தியாசமான ரவை பணியாரம் செய்ய...
ஒரு கிலோ பச்சரிசியுடன், 100 கிராம் உளுந்து சேர்த்து வறுத்து, அதனுடன், 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து விட்டால், தேவைப்படும் போது, சீரகம் போட்டு தேன் குழல் செய்யலாம். சுவையும்கூடும். நேரமும் மிச்சம்.
ரவா. மைதா, சர்க்கரை இம்மூன்றையும் சமமானஅளவில்எடுத்து, சிறிதுதண்ணீர்சேர்த்துகெட்டியாககரைக்கவும். குழிக்கரண்டியில் மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு எடுத்தால், வித்தியாசமான ரவை பணியாரம் தயார்.
காராபூந்தியில் காரம் அதிகமானால், மாவுடன் உப்பு, சிறிது எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கலாம்.
லட்டு பிடிக்கும் போது, ஜீராவில், 100 கிராம் நெய் சேர்த்தால், நெய்யில் செய்தது போல் ருசிக்கும்.
ஜாமூன், பாதுஷா போன்றவை செய்யும்போது, மீதமாகும் ஜீராவை பாயசத்துடன் சேர்க்க, கமகம் மணத்துடன் இருக்கும். ஏலக்காய் சேர்க்கவே வேண்டாம்.
0
Leave a Reply