25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சாக்லெட் தயாரிப்பில் பயன்படும் கோகோ தாவரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாக்லெட் தயாரிப்பில் பயன்படும் கோகோ தாவரம்.

சாக்லெட் தயாரிப்பில் பயன்படுகிறது கோகோ தாவரம். தென் அமெரிக்கா அமேசான் ஆற்றுப்படுகையை தாயகமாக உடையது. இதன் தாவரவியல் பெயர் தியோபிரமா கோகோ. ஸ்டெர்குலியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கி.மு.,2000 முதலே கோகோ தாவரம் வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் வழியாக தெரியவருகிறது.

இந்த தாவரத்தை சொர்க்கத்தில் இருந்து கடவுள் கொண்டு வந்ததாக மயன் நாகரிக காலத்தில் மக்கள் நம்பினர். கடவுளின் உணவு எனவும் அழைக்கப்பட்டது. கோகோவில் கிரையல்லோ, பாரஸ்டிரோ உட்பட மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றில் கிரையல்லோ சிவப்பு நிற காய்களை உடையது. பராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களை கொண்டது. இந்த வகை இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது.

மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாகபயன்படுகிறது கோகோ விதை. உலகளவில் சாக்லெட் உணவு பொருட்கள் மற்றும் சுவை மிக்க பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கோகோவில் தயாரிக்கப்படும் வெண்ணெய் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக விளங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News