25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 10, 2025

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (10.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது.  ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.கல்லூரி, வீடு என்ற கதகதப்பான இந்த மதில் சுவருக்குள் இருக்கும் வாழ்க்கை ஒரு போதும் சமூகம் உங்களுக்கு வழங்காது.உங்களுக்கு விரும்பத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய குணநலன்கள் அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய  குண நலன்களை நீங்கள் உருவாக்கிக் கொள்வதில், நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது அல்லது நீங்கள் மாற்றிக் கொள்வது என்பதை தாண்டி மற்றொருவர் இந்த குணங்களை மாற்றுவது என்ற நிலை வரும் போதும், அதை எதிர்கொள்ளும்போதும் சட்டப் பாதுகாப்புகள் என்ன இருக்கின்றன என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும்.படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இந்த நான்கும் தான் மனிதனின் உடைய வெற்றியை தீர்மானிக்கிறது. ஆனால், இந்நான்கும் இருக்கக்கூடிய எல்லோரும் முன்னேறவில்லை.வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள்  தேடிய தேடல்கள் தான். எனவே, படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இந்த நான்கும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம்.நீங்கள் எவ்வளவு விரிவாகவோ, ஆழமாகவோ தேடுகிறீர்களோ நீங்கள் அவ்வளவு மிக மதிப்பு மிக்க வைரங்களை வாழ்க்கையில் பெறுவீர்கள். இன்றைக்கு மாறி வரக்கூடிய உலகில் கற்றல், கற்பித்தல், புதியனவற்றை தெரிந்து கொள்ளுவதற்கான சூழல் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது.இன்று தனது தொடர் வளர்ச்சிக்கு தேவையான கற்றலை உலகம் முழுவதும் இணைய வழியில் பெற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள்  வந்து கொண்டிருக்கும் போது, நமக்கான இடம் எங்கு இருக்கிறது. சட்ட பாதுகாப்பு எங்கு இருக்கிறது, நமக்கான சமூக பாதுகாப்பு எது, சமூக பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது, தனி மனித பிரச்சினைகள் அணுகுவது என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியம்.எனவே, நீங்கள் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உங்களது தனிப்பட்ட வாழ்வில், சமூக வாழ்வில் உங்களுடைய குடும்ப வாழ்வில், தொழில் வாழ்வில் இவற்றிற்கு எல்லாம் தனக்கு தேவையான தகவமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.எனவே, நாம் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை தகவமைத்து கொள்வதற்கான புரிதல்கள் நமக்கு வேண்டும். அதற்கான அறிவை வாசிப்பதன் மூலமாக, கேட்பதன் மூலமாக, இந்த சமூகத்தினை புரிந்து கொள்;வதன் மூலமாக கிடைக்கும். அறிவு என்பது நம்மை துன்பத்தில் இருந்து காக்கும்.சமூக வாழ்விற்கும், தனி மனித வாழ்விற்கும், பொருளாதார விடுதலைக்கும் நீங்கள் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். இதனை எதிர்கொள்ள உங்களுக்கு கல்வியின் கேள்வியின் மூலமாக வரக்கூடிய அறிவு மற்றும் மற்றவர்களின் அனுபவங்களின் மூலம் நாம் அறிவை பெற்றுக்கொள்வது.எனவே, அடுத்தவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அதிகமான வாய்ப்புக்களை பெற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நீங்கள் விழிப்புணர்வை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.வாய்ப்புகளை பெற்று தனிமனித வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் மிக பெரிய நிலையை நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் அடைவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கு எடுத்துக்கூறுவதற்கான சிந்தனையும், அறிவையும் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 10, 2025

குடும்ப அட்டை வகை மாற்றம் தன்னார்வலர் சிறப்பு முகாம் 15.02.2025 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மிகை புழக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், அரிசி குடும்ப அட்டைகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்று குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY), முன்னுரிமை அற்ற அரிசி ,குடும்ப அட்டைகள் (NPHH(R))  ஆகியவற்றை விருப்பமுடைய தன்னார்வலர்கள், 15.02.2025 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடைபெறும் சிறப்பு முகாம்களில், விண்ணப்பப் படிவங்கள் கொடுத்து முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டையாகவோ (NPHH-S) அல்லது எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளாகவோ (NPHH-NC) மாற்றலாம். விருப்பமுடைய, தன்னார்வலர்கள் இம்முகாமை பயன்படுத்தி பொது விநியோக திட்டம் பயன்பாடு சரியான முறையில் தேவைப்படும் மக்களுக்கு சென்றைடைய முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 10, 2025

போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வீ.ப.ஜெயசீலன் , I A S,அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு  நடவடிக்கைகள், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் எடுத்து வரப்படுகின்றன.  குறிப்பாக தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சமீபத்தில்  சமூக ஊடகங்களில் போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகின்ற நிலையில், மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.  இது போன்ற போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடிய மிட்டாய் வகைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இம்மாவட்டத்தில் எந்தவொரு வணிகராவது இதுபோன்ற மிட்டாய் வகைகளையோ அல்லது போதைப்பொருள் கலந்துள்ள உணவுப்பொருட்களையோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அந்த கடையின் வணிகம் நிறுத்தப்பட்டு, அபராதம் விதித்து  வழக்குகள் தொடரப்படும். தொடர்ந்து  இது போன்ற  செயல்களில்    ஈடுப்பட்டால், வழக்குகள் முடியும்வரை கடைகள் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரிக்கப்படுகிறது.தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  01.01.2024 முதல் 31.01.2025 வரை 430 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டும், ரூ.1,13,91,000/- (ரூபாய் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரம்) அபராதம் விதிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.         பொதுமக்கள், இம்மாதிரியான  வித்தியாசமான வகையில் சந்தேகத்திற்குரிய  மிட்டாய் அல்லது சாக்லேட் வகைகள் விற்பனை  செய்யப்படுவது கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின்  வாட்ஸ்அப்  எண்ணிற்கோ அல்லது 04562-225255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்  தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 10, 2025

செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.02.2025) செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார்.வளரும் தமிழ் மொழிநுட்பத் தேவைகளை ஈடு கொடுத்துப் புதிய படைப்புகளை உருவாக்க, செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் முன்னெடுப்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.திரள் தளத்துடன் ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் வாணி பிழைதிருத்தி,  அக்ரிசக்தி, தமிழ் அநிதம், சிஐஎஸ்-ஏ2கே போன்ற  நிறுவனங்களுடன் இணைந்து நடக்கும் இந்தத் தமிழ் மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியில் மாணவர்களும், மொழி வல்லுநர்களும், தொழில்முனைவோர்களும் கலந்து கொள்ளலாம்.சந்தைப்படுத்தக் கூடிய புத்தாக்கச் சிந்தனை தரும் போட்டியாளர்களுக்குப் படைப்புகளை வளர்த்தெடுக்கத் தேவையான ஊக்கத் தொகையும் அது சார்ந்த தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும். மேலும் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வழிகாட்டுதல்களும் பயிற்சியும் வழங்கப்படுவதால் தமிழில் தொழில்நுட்பப் புத்தாக்கங்களை உருவாக்கிச் சாதனை படைக்கலாம்.எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள், மொழி வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் http://form.startuptn.in/TLTH   என்ற கூகுள் படிவத்தினை 02.03.2025-க்குள் நிரப்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 78452-50039(தனபிரகாஷ்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN) மதுரை வட்டார மைய அலுவலர் திரு.க.சக்திவேல், திரள் தளத்தின் சார்பாக திரு.நீச்சல்காரன் இராஜாராமன்  மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Feb 09, 2025

விருதுநகர் மாவட்டம், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட603 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலாசுப்பையா திருமண மண்டபத்தில்(08.02.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S..,அவர்கள் தலைமையில்விழா நடைபெற்ற விழாவில், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அரசின் திட்டங்களைமக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.அறிவிக்கப்பட்டஅரசதிட்டபயன்களைசாதாரணமான ஏழைஎளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று சொன்னால் அதற்கான முழு ஆதரவும், முனைப்பும் அரசு அலுவலர்களிலேயே இருந்திட வேண்டும் அமைச்சர்.அதன்படி, இன்று நடைப்பெற்ற விழாவில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.12.16 இலட்சம் மதிப்பிலான நத்தம் இலவச வீட்டு மனைபட்டாக்களும்,ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.44.57இலட்சம் மதிப்பிலான மின்னணு பட்டாக்களும்,120 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டைகளும்,102 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1இலட்சம்மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும்,56 பயனாளிகளுக்கு ரூ.45.40 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண தொகைகளும், தோட்டக்கலை துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.2இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 198பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்ட அடையாள அட்டைகளும், வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.9700 மதிப்பில் இயற்கை உரம்மற்றும் மரக்கன்றுகளும் எனமொத்தம் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனி நபர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  அடிப்படை வசதியான குடிநீர், சாலை, போக்குவரத்து,பள்ளிகள், சுகாதாரம்,  தெருவிளக்குகள், மழை நீர்வடிகால் வசதிகள்,உதவித்தொகைகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், குடியிருப்பை உறுதி செய்யும் வகையில் பட்டாககள் உள்ளிட்ட திட்டங்களும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது..காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு மிகப்பெரிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு இந்த இரண்டு பேரூராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் முழு அளவில் வழங்கப்படும்.விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய இப்பகுதி மக்களுக்கு கம்பிக்குடிகால்வாய் திட்டத்தை சுமார் 18 கிலோமீட்டர் நீளத்திற்கு தனியாக கால்வாய் அமைக்கக்கூடிய பணிகளுக்கு ஏறத்தாழ ரூ.10 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.  அதற்கான நில எடுப்பு  பணிகளை  தொடங்கி இருக்கிறோம். .மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:விருதுநகர் மாவட்டத்தில் பலஇடங்களில் பொது கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அமைச்சர் அவர்களின் தொடர் முயற்சியால் குடிநீர், சாலை போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுவந்தாலும், தனி மனிதர்களுக்கு, ஒவ்வொரு நபர்களுக்கும் அரசனுடைய திட்டங்கள் நேரடியாக சென்று சேர வேண்டும். அதுவும் குறிப்பாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களாக இருக்கக்கூடிய நிதியுதவி திட்டங்களாக இருந்தாலும் சரி,பட்டா வழங்குவது உள்ளிட்ட உரிமைகளுக்கான திட்டங்களாக இருந்தாலும் சரிஅவற்றையெல்லாம் நேரடியாக சென்றுவழங்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நமது மாவட்டத்தில் நடத்தி இருக்கிறோம்.அரசினுடைய கலைஞரின் கனவுஇல்லம் என்ற வீடுகட்டும் திட்டம் இருக்கிறது.ஆனால் வீடு கட்டும் திட்டத்திற்கு முன்பாக அனைவருக்கும் பட்டாக்களை வழங்க வேண்டும்.என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நமதுமாவட்டத்திற்கு வருகை தந்த போது ஏறத்தாழ 41 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் உள்ளிட்ட வீடு நில உரிமைக்கான ஆணைகளைவழங்கினார்.திருச்சூர், காரியாபட்டி நரிக்குடி போன்ற ஒன்றியங்களில்இன்னும் நிலங்களை தேர்வு செய்து பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்க வேண்டும் என்பதற்காக தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. நமது பகுதியில் தான்முதன்முதலாக நரிக்குறவர் இனமக்களுக்கு புதிதாக வீடுகளை கட்டி அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம். அதேபோன்று திருநங்கைகளுக்கு பட்டாக்களை வழங்கி வீடுகள் கட்டக்கூடிய திட்டத்தின் மூலமாக அவர்களுக்கும் வழங்கி இருக்கின்றோம். இப்படி சமூகத்தினுடைய எந்தஒரு பகுதியினரையும், பிரிவினரையும் விட்டுவிடக்கூடாது என்பதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறோம்.தொடர்ச்சியாக நிறைய பேருக்கு கலைஞர் காப்பீடு திட்டம் என்ற ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்குகிறோம்.அமைச்சர் பெருமக்கள் அவர்களின் அறிவுரையின் படி,மருத்துவ காப்பீடு அட்டைக்கான முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று நடத்தி மருத்துவ காப்பீடு அட்டை யாருக்கு இல்லையோ அவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்று மருத்துவ காப்பீடு அட்டை  வழங்கி இருக்கின்றோம்.  அரசு அலுவலர்கள் இன்னும் விரைந்து செயல்பட்டு அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு கண்டு, உரியகாலகட்டத்திற்குள் அந்தபயன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Feb 09, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இணைப்புச்சாலை ரூ.38.24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று(08.02.2025)இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலை கி.மீ.2/0லிருந்து (மா.நெ.சாலை-41) (இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம்) திருமங்கலம் கொல்லம் 1600 கி.மீ.66/8 வரை (தே.நெ.744) (இராஜபாளையம் அரசு மருத்துவமனை) இணைப்புச்சாலை ரூ.38.24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S..,  அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.அமைச்சர்  அவர்கள் தெரிவித்ததாவது:இந்த இணைப்பு சாலை  பணிக்கு ரூ.30.00 கோடியும், நில எடுப்பிற்காக  ரூ.8.34 கோடியும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மொத்தம் ரூ.38.34 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இச்சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்கள் அனைத்தும் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இப்பணி விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது.இராஜபாளையம் நகரமானது வளர்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இந்நகரத்தில் பின்னலாடைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையத்தின் புதிய பேருந்து நிலையம் இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால்,மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளில் சென்று வருகிறது. அவ்வாறு வருவதால், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்த வண்ணம் உள்ளது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலையை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சாலைப்பணிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கிய காரணத்தினால் இப்பணி செயலாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலைப்பணி அனைத்தும் முடிந்தவுடன், திருநெல்வேலி, சங்கரன்கோவில், இராஜபாளையம், மதுரை, தென்காசி, கொல்லம் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனத்தும் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தா வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புதிய சாலை வழியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இராஜபாளையத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறைய  வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 09, 2025

விருதுநுகர் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ்  மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டம் 1988 G.O.Ms.No.33, நாள் 23.01.2025-ன் படி பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:1. அதிகபட்ச தூரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.2. குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் ((Unserved Route Length)  சாலையில் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.3. தொடக்கப்பள்ளி/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.4. முனைய புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டு தளங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் பிராந்திய போக்குவரத்து ஆணையம்/மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, அதாவது மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.5. பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.6. மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்துகள் Wheel Base  390cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும்7. நிலைப்பேருந்து அல்லது மினி பேருந்து மூலம் வழிதடத்தின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத வழித்தடமாக கருதப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 2024-இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள,; தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் 10.02.2025க்குள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 07, 2025

அரசு,அரசு உதவி பெறும் கல்வி கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு,அரசு உதவி பெறும் கல்வி கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ) மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.ப.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Schloarship)  திட்டம்கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு  இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மி.பிவ/சீ.ம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.    2. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றொரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.திட்டத்திற்கான விண்ணப்பங்கள்,University  Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/)  என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.கல்வி உதவித்தொகைக்கு, மாணாக்கர்கள் உடனடியாக விண்ணப்பிக்காலம் எனவும், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.02.2025 ஆகும்.   அ). புதுப்பித்தல் மாணாக்கர்கள்:     (Renewal Students i.e.2nd, 3rd  & 4th Year in the year 2024-25)        ஏற்கனவே கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2,3 (ம) 4 ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள், கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.  அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை, சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.ஆ)-புதிய மாணாக்கர்:((1st Year student & the students who are not applied the scholarship during the year 2023-2024)     நடப்பு கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித் தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணர்க்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal officer) அணுகி https.//umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.3) மேற்படி விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து, BC, MBC, & DNC வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்களை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.4) கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி  தொடர்பு கொள்ளலாம் என                மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 07, 2025

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (07.02.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.1.20 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,நெடுங்குளம் ஊராட்சி நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தக் கூடம் கட்டப்பட்டு வருவதையும், தச்சக்குடி ஊராட்சி தலைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.13.35 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், நடுவப்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், நடுவப்பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Feb 07, 2025

சிவகாசி எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (07.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது.  ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் அனுபவங்கள் தான் சிறந்த ஆசிரியர். மற்றவர்களின் சரியான அனுபவங்களை அவர்கள் கடந்து வந்த பாதைகளை  நாம் நன்கு கற்றுகொள்ள வேண்டும்.மிக புகழ்பெற்ற தத்துவஞானி மனிதன் என்பவன் தன்னால் செய்ய முடியாமல் போன, தன்னால் தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து உருகும் ஒரு  குற்ற உணர்ச்சியின் தொகுப்பு என்று குறிப்பிடுகிறனர். அப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது. உங்களுக்கு  என்ன விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லப்படக்கூடியது தான் இந்த நிகழ்ச்சி.அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து தனக்கான பாடத்தை கற்றுக்கொள்வது தான் மிக முக்கியமானது. இரண்டு வகையில் ஒருவருக்கு துன்பம் வரும். நமக்கு நாமே உருவாக்கி கொள்ளக்கூடிய துன்பம். இதை தான் இலக்கியத்தில் தீதும் நன்றும் பிறர் தர வாரா. நமக்கு வரக்கூடிய இன்பமும், துன்பமும் மற்றவர்களால் வராது. நாமே உருவாக்கி கொள்கிறோம். மற்றொன்று மற்றவர்களால் ஏற்படக்கூடிய துன்பம். இந்த இரண்டில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்வதற்கு அறிவு தான் மிக முக்கியமானது.இந்த கால கட்டத்தில் கற்றலில் 15 விழுக்காடு மட்டும் தான் நீங்கள் படிப்பது, தேர்வு எழுதுவது, மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது. மீதமுள்ள 85 விழுக்காடு வாழ்க்கைக்கு தேவையான கற்றல். இந்த கால கட்டத்தில் தான் நீங்கள் நல்ல நட்பை, உறவை உருவாக்கி கொள்ளகூடியது மிகவும் அவசியம். எதையெல்லாம் செய்யவேண்டும், செய்யக்கூடாது எனவும், நாம் அறிவை முதன்மைப்படுத்தி, உணர்ச்சியை இரண்டாம் நிலைப்படுத்தி செயல்படுத்துவது குறித்த பக்குவத்தை பெறக்கூடிய காலக்கட்டம். யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.நான் சிறப்பாக இருக்கிறேன். அல்லது நான் எப்படி என்னை வெளிப்படுத்தி கொள்கிறேன் என்பதை குறித்து நேர்மறையான, எதிர்மறையான செய்திகளை, விமர்சனங்களை, நன்மைகளை நாம் கவனமாக புரிந்து கொள்ள  வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்சினைகளை நாம் நினைத்துக்கொள்கிறோமோ, அல்லது உண்மையாகவே இருக்கின்றதோ அதே பிரச்சினைகள் தான் எல்லோருக்கும் வேறு வேறு வழிகளில் இருக்கும். எனவே, இந்த பிரச்சினைகள், இயலாமையோ அல்லது நமக்குண்டான வாய்ப்புகளோ ஒருபோதும் நமக்கான வெற்றியையோ, எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில்லை.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.இந்தக் கால கட்டத்தில் உங்களுக்கு நேரமும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அரசினுடைய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மிகவும்  அவசியம். ஏனென்றால், திறமையை விட, கல்வியை விட, உழைப்பை விட என மற்ற எல்லாவற்றையும் விட ஒரு பெண்ணை வெற்றியாளராக மாற்றுவதற்கு விழிப்புணர்வு தான் மிகவும்  அவசியம். எனவே, நீங்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

AD's



More News