விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இணைப்புச்சாலை ரூ.38.24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று(08.02.2025)இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலை கி.மீ.2/0லிருந்து (மா.நெ.சாலை-41) (இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம்) திருமங்கலம் கொல்லம் 1600 கி.மீ.66/8 வரை (தே.நெ.744) (இராஜபாளையம் அரசு மருத்துவமனை) இணைப்புச்சாலை ரூ.38.24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:இந்த இணைப்பு சாலை பணிக்கு ரூ.30.00 கோடியும், நில எடுப்பிற்காக ரூ.8.34 கோடியும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மொத்தம் ரூ.38.34 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இச்சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்கள் அனைத்தும் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இப்பணி விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது.இராஜபாளையம் நகரமானது வளர்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இந்நகரத்தில் பின்னலாடைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையத்தின் புதிய பேருந்து நிலையம் இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால்,மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளில் சென்று வருகிறது. அவ்வாறு வருவதால், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்த வண்ணம் உள்ளது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலையை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சாலைப்பணிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கிய காரணத்தினால் இப்பணி செயலாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலைப்பணி அனைத்தும் முடிந்தவுடன், திருநெல்வேலி, சங்கரன்கோவில், இராஜபாளையம், மதுரை, தென்காசி, கொல்லம் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனத்தும் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தா வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புதிய சாலை வழியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இராஜபாளையத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply