25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டம், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட603 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட603 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலாசுப்பையா திருமண மண்டபத்தில்(08.02.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S..,அவர்கள் தலைமையில்விழா நடைபெற்ற விழாவில், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அரசின் திட்டங்களைமக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.அறிவிக்கப்பட்டஅரசதிட்டபயன்களைசாதாரணமான ஏழைஎளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று சொன்னால் அதற்கான முழு ஆதரவும், முனைப்பும் அரசு அலுவலர்களிலேயே இருந்திட வேண்டும் அமைச்சர்.

அதன்படி, இன்று நடைப்பெற்ற விழாவில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.12.16 இலட்சம் மதிப்பிலான நத்தம் இலவச வீட்டு மனைபட்டாக்களும்,ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.44.57இலட்சம் மதிப்பிலான மின்னணு பட்டாக்களும்,120 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டைகளும்,102 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1இலட்சம்மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும்,56 பயனாளிகளுக்கு ரூ.45.40 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண தொகைகளும், தோட்டக்கலை துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.2இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 198பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்ட அடையாள அட்டைகளும், வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.9700 மதிப்பில் இயற்கை உரம்மற்றும் மரக்கன்றுகளும் எனமொத்தம் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 தனி நபர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  அடிப்படை வசதியான குடிநீர், சாலை, போக்குவரத்து,பள்ளிகள், சுகாதாரம்,  தெருவிளக்குகள், மழை நீர்வடிகால் வசதிகள்,உதவித்தொகைகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், குடியிருப்பை உறுதி செய்யும் வகையில் பட்டாககள் உள்ளிட்ட திட்டங்களும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது..காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு மிகப்பெரிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு இந்த இரண்டு பேரூராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் முழு அளவில் வழங்கப்படும்.விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய இப்பகுதி மக்களுக்கு கம்பிக்குடிகால்வாய் திட்டத்தை சுமார் 18 கிலோமீட்டர் நீளத்திற்கு தனியாக கால்வாய் அமைக்கக்கூடிய பணிகளுக்கு ஏறத்தாழ ரூ.10 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.  அதற்கான நில எடுப்பு  பணிகளை  தொடங்கி இருக்கிறோம். 

.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

விருதுநகர் மாவட்டத்தில் பலஇடங்களில் பொது கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அமைச்சர் அவர்களின் தொடர் முயற்சியால் குடிநீர், சாலை போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுவந்தாலும், தனி மனிதர்களுக்கு, ஒவ்வொரு நபர்களுக்கும் அரசனுடைய திட்டங்கள் நேரடியாக சென்று சேர வேண்டும். அதுவும் குறிப்பாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களாக இருக்கக்கூடிய நிதியுதவி திட்டங்களாக இருந்தாலும் சரி,பட்டா வழங்குவது உள்ளிட்ட உரிமைகளுக்கான திட்டங்களாக இருந்தாலும் சரிஅவற்றையெல்லாம் நேரடியாக சென்றுவழங்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நமது மாவட்டத்தில் நடத்தி இருக்கிறோம்.அரசினுடைய கலைஞரின் கனவுஇல்லம் என்ற வீடுகட்டும் திட்டம் இருக்கிறது.ஆனால் வீடு கட்டும் திட்டத்திற்கு முன்பாக அனைவருக்கும் பட்டாக்களை வழங்க வேண்டும்.என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நமதுமாவட்டத்திற்கு வருகை தந்த போது ஏறத்தாழ 41 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் உள்ளிட்ட வீடு நில உரிமைக்கான ஆணைகளைவழங்கினார்.திருச்சூர், காரியாபட்டி நரிக்குடி போன்ற ஒன்றியங்களில்இன்னும் நிலங்களை தேர்வு செய்து பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்க வேண்டும் என்பதற்காக தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

 நமது பகுதியில் தான்முதன்முதலாக நரிக்குறவர் இனமக்களுக்கு புதிதாக வீடுகளை கட்டி அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம். அதேபோன்று திருநங்கைகளுக்கு பட்டாக்களை வழங்கி வீடுகள் கட்டக்கூடிய திட்டத்தின் மூலமாக அவர்களுக்கும் வழங்கி இருக்கின்றோம். இப்படி சமூகத்தினுடைய எந்தஒரு பகுதியினரையும், பிரிவினரையும் விட்டுவிடக்கூடாது என்பதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறோம்.தொடர்ச்சியாக நிறைய பேருக்கு கலைஞர் காப்பீடு திட்டம் என்ற ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்குகிறோம்.அமைச்சர் பெருமக்கள் அவர்களின் அறிவுரையின் படி,மருத்துவ காப்பீடு அட்டைக்கான முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று நடத்தி மருத்துவ காப்பீடு அட்டை யாருக்கு இல்லையோ அவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்று மருத்துவ காப்பீடு அட்டை  வழங்கி இருக்கின்றோம்.  அரசு அலுவலர்கள் இன்னும் விரைந்து செயல்பட்டு அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு கண்டு, உரியகாலகட்டத்திற்குள் அந்தபயன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News