25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அரசு,அரசு உதவி பெறும் கல்வி கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும்  மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு,அரசு உதவி பெறும் கல்வி கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு,அரசு உதவி பெறும் கல்வி கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ) மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.ப.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Schloarship)  திட்டம்

கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு  இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மி.பிவ/சீ.ம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    2. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றொரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டத்திற்கான விண்ணப்பங்கள்,University  Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/)  என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.கல்வி உதவித்தொகைக்கு, மாணாக்கர்கள் உடனடியாக விண்ணப்பிக்காலம் எனவும், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.02.2025 ஆகும்.

   அ). புதுப்பித்தல் மாணாக்கர்கள்:
     (Renewal Students i.e.2nd, 3rd  & 4th Year in the year 2024-25)
        ஏற்கனவே கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2,3 (ம) 4 ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள், கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.  அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை, சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

ஆ)-புதிய மாணாக்கர்:
((1st Year student & the students who are not applied the scholarship during the year 2023-2024)
     நடப்பு கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித் தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணர்க்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal officer) அணுகி https.//umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

3) மேற்படி விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து, BC, MBC, & DNC வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்களை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி  தொடர்பு கொள்ளலாம் என                மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News