25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வெறுங்கால் நடை நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெறுங்கால் நடை நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் .

வெறுங்கால் நடை ,இயற்கையான ஒரு மனிதனின் நடையை மீட்டெடுத்து, கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதுடன், இடுப்பு, முழங்கால்கள் இலகுவாக இயங்க உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப் பிடிக்க தொடங்கி உள்ளனர்.

மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது. நமது செல்கள் மின் தூண்டுதல்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகின்றன. நரம்பு மண்டலம் உடல் முழுவதும் மற்றும் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்ப மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் நாம் சிந்திக்கவும், நகரவும், உணரவும் முடியும். ஓய்வெடுக்கும் செல்கள் உட்புறமாக எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், வெளிப்புற செல் சூழல் நேர்மறையாக மின்னூட்டம் ,இதன் பின்னணியில் ஒரு எளிய அறிவியல் உள்ளது என் றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பூமி ஒரு எதிர்மறை மின்னூட்டம் என்ற நெகடிவ் மின்னூட்டம் கொண்டுள்ளது.மனிதனின் கால்கள் நிலத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது, பூமியை அழுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நேர்மறை மின்னூட்டம் சமநிலை அடைந்து உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஆய்வுகளில் நிலத்தில் வெறுங்கால்களால் நடப்பதன் மூலம், மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறைந்து, உடல் ஆற்றல் அதிகரிக்கிறது என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. காலணிகள் இன்றி நிலத்தில் நடப்பது பல்வேறு கிருமிகள் உடலில் தொற்றி உடல் நலனை பாதிக்கும் என்றும் பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். 

 இயற்கை மருத்துவர்கள் புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது. இது நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் என்றும் கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News