கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்
பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா உலகளவில் பிரபலமானது. இந்தாண்டுக்கான விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வெள்ளை நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் உடன் கூடிய பனராஸ் புடவையை அணிந்து வந்ததோடு, நெற்றி வகிட்டில் குங்குமத்தை (சிந்துார்) திலகமிட்டு சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார். இதேபோல் நடிகை அதிதி ராவ்வும் சிவப்பு நிற புடவையில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை திலகமிட்டு பங்கேற்றார். சமீபத்தில் பாகிஸ்தானில் பயங்கர வாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அதிரடி ஆப்பரேஷன் 'சிந்துாரை' பிரதிபலிக்கும் விதமாக இவர்கள் இப்படி திலகமிட்டு பங்கேற்றதாக சொல்கிறார்கள் .
0
Leave a Reply