17 th AND 18 th MAY விளையாட்டு போட்டிகள்
கால்பந்து
19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் அருணாச்சல பிரதேசத்தில்நேற்று நடந்த பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.பின், 'பெனால்டி ஷூட்-அவுட்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் நான்கு வாய்ப்பில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்து 3-3 என சமநிலையில் இருந்தன. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது முறையாக (2019, 2022, 2023, 2025)சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
டேபிள் டென்னிஸ்
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, நைஜீரியாவின் பாத்திமோ பெல்லோ மோதினர். மணிகா 4-0 (11-5, 11-6, 11-8, 11-2) என வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
தடகளம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (மே 27-31 ) தென் கொரியாவில் நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் கேரளாவில் இந்தியன் கிராண்ட் ப்ரி 2, தடகளம் நடந்தது.
பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் நித்யா, 13.27 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார்.
400 மீ., தடை ஓட்டத்தில் வித்யா, 57.45 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்றார்.
தொடர்ந்து அசத்திய வித்யா, 200 மீ., ஓட்டத்தில் இரண்டாவது இடம் (23.72 வினாடி) பிடித்தார். 400 மீ., (பி பிரிவு) ஓட்டத்தில் சுபா (53.57 வினாடி) முதலிடம் பிடித்தார். 400 மீ., 'ஏ' பிரிவு ஓட்டத்தில் பவித்ராவுக்கு (55.21) மூன்றாவது இடம் கிடைத்தது.
ஆண்களுக்கான தடகளத்திலும் தமிழக வீரர்கள் அசத்தினர். 200 மீ., ஓட்டத்தில் (ஏ பிரிவு) வருண் 21.51 வினாடி நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பெற்றார்.
400 மீ., 'சி' பிரிவு ஓட்டத்தில் சுராஜ், 47.00 வினாடியில் ஓடி முதலிடம் பிடித்தார். 400 மீ., 'டி' பிரிவில் ராஜேஷ் ரமேஷ் (47.77 வினாடி) முதலிடம் பெற்றார்.
0
Leave a Reply