பழைய பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்- மீண்டும் 'மதராஸி'-
சிவ கார்த்திகேயன் தனது 23வது படத்தில் , ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வந்தார். நாயகியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கின்றனர். பெயர் வைக்காமலே படப்பிடிப்பு பாதிக்கு மேல் வளர்ந்த நிலையில் ஹிந்தியில் சல்மான் நடிக் கும் சிக்கந்தர் பட வாய்ப்பு வந்ததால் இப்படம் நின்றுள்ளது. தற்போது இந்த படத்திற்கு 'மதராஸி' என பெயரிட்டுள்ளனர். 2006ல் அர்ஜுன் நடிப்பில் இதேபெயரில் ஒரு படம் வந்தது. இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் "எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன்" ஆகிய படங்கள் பழைய பட தலைப்பில் வந்துள்ளது. இதுதவிர பழைய பட தலைப்பில் சுதா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
0
Leave a Reply