கிரிக்கெட் நான்காவது டெஸ்ட் (ஜூலை 23-27) மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.
.கிரிக்கெட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 12 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது. சிராஜும் அவுட்டாக, ஜடேஜா செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனால், இங்கிலாந்து சரியாக திட்டம் வகுத்து வெற்றியை பறித்துச் சென்றது.
முதல்3 போட்டிகளிலும் இரு அணிகளும் கடைசி வரை போராடின. இங்கிலாந்து 2,1 என முன்னிலை பெற்றாலும், இரு அணிகளும் சமபலத்தில் காணப்பட்டன. ஒட்டுமொத்தமாக உயர்தர டெஸ்ட் போட்டிகளைகாண முடிந்தது.
இதன் பின் இந்திய அணி வீரர்கள், நான்காவது டெஸ்ட்(ஜூலை23,27) நடக்கவுள்ள மான்செஸ்டருக்கு கிளம்பிச் சென்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள்இங்கிலாந்து மன்னர் சார்லசை சந்தித்தனர்.இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர் மன்பிரீத் கவுர் கூறுகையில்," இதற்கு முன் பலமுறை இங்கிலாந்து வந்துள்ளோம். முதன் முறையாக இப்போது தான் இங்கிலாந்து மன்னரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறந்த அனுபவமாக இருந்தது," என்றார்.
0
Leave a Reply