"சனாதனம் என்பது மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை" – நடிகர் அர்ஜூன் விளக்கம்.
'பிளாஸ்ட்' பட வெளியீட்டின் போது பேசிய நடிகர் அர்ஜூன், "பெண்கள் தைரியமாகச் சண்டை போட வேண்டும் என்ற படத்தின் திரைக்கதை அருமை. முதல்வர் விஜய் நல்லது செய்வார். சனாதனம் என்பது திருடக்கூடாது, தப்பு செய்யக்கூடாது மற்றும் வயதான காலத்தில் பெற்றோரை கடவுள் போல் பார்க்க வேண்டும் எனச் சொல்லும் ஒரு வாழ்க்கை முறை; அது மதமல்ல" என்று விளக்கமளித்துள்ளார்.
சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் 'பிளாஸ்ட்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ. 25.26 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டில் வெளியான வெற்றிப் படங்களின் பட்டியலில் இதுவும் இணைந்துள்ளது.
0
Leave a Reply