25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


 பிரட் சில்லி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 பிரட் சில்லி

தேவையான பொருட்கள் 

 5பிரட் துண்டுகள் -

1பெரிய வெங்காயம்

2 தக்காளி , 2 பச்சை மிளகாய் , 1ஸ்பூன்சீரகம்

1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்

1ஸ்பூன்மிளகாய் தூள் ,1ஸ்பூன்தனியா தூள்,1 ஸ்பூன்கரம் மசாலா ,

1ஸ்பூன்பட்டர்,தேவைக்கேற்பதண்ணீர்,தேவையான அளவுஎண்ணெய்,

தேவையான அளவுஉப்பு 

செய்முறை

முதலில் பிரட் துண்டுகளை நான்கு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பட்டர் இளகியவுடன் அதில் வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்

பின் மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்க்க வேண்டும்.பின் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.இதனுடன் தேவைக்கேர்ப்ப உப்பு சேர்க்க வேண்டும்.மசாலா வெந்தவுடன் வதக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.இறுதியாக ஒரு கை அளவு கொத்த மல்லி இலைகளை தூவி இறக்கவும்.இப்போது சுவையான 

பிரட் சில்லி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News