25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய வீரர் பிரவீன் சர்மா ஆசிய யூத் பாரா விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீரர் பிரவீன் சர்மா ஆசிய யூத் பாரா விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.

.ஆசிய யூத் பாரா விளையாட்டு துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் 99 பேர் (61 வீரர், 38 வீராங்கனை) பங்கேற்கின்றனர்.

, 13.59 மீ., எறிந்தஇந்தியாவின் பிரவீன் சர்மாஆண்களுக்கான குண்டு எறிதல் ('எப் 11-13') பைனலில் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் தேவிபிரசாத் (8.08 மீ.,) 5வது இடம் பிடித்தார்.'எப் 32-34' பிரிவு குண்டு எறிதல் பைனலில் இந்திய வீரர் வினேஷ் (7.46 5.,) வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ('எப் 35-38') பைனலில் இந்தியாவின் விக் ஷீத்  குமார் (30.87 மீ.,) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

('டி20') பைனலில் பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் இலக்கை, ஒரு நிமிடம், 07.07 வினாடியில் கடந்த இந்தியாவின் புவி அகர்வால் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('442-47, 61-64') பைனலில் இந்தியாவின் நரேஷ் (1 நிமிடம், 00.27 வினாடி) வெள்ளி கைப்பற்றினார். பெண்களுக்கான வட்டு எறிதல் ('எப்  51-57') பைனலில் இந்தியாவின் கோகிலா (15.4 மீ.,) வெண்கலத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்11-13') பைனலில் இந்தியாவின் பிரவீன்  (34.08 .,),இர்பான் திவான் (28.12 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம்கைப்பற்றினர்.

இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 21 வெண் கலம் என, 55 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் உஸ்பெகிஸ்தான் (97 தங்கம், 55 வெள்ளி, 35 வெண்கலம்) உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News