25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


குளிக்கும் போது முதுகு தேய்க்க ஆள் தேட வேண்டாம். ஜப்பானில் வந்தாச்சு நவீன மிஷின் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிக்கும் போது முதுகு தேய்க்க ஆள் தேட வேண்டாம். ஜப்பானில் வந்தாச்சு நவீன மிஷின் 

ஜப்பானில், மனிதர் களை குளிப்பாட்டி விடு வதற்கென, பிரத்யேக,'வாஷிங்' மிஷின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கிழக்காசிய நாடான ஜப்பான், எப்போதுமேபுதுமையான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றது. அந்த வகையில் தற்போது, மனிதர்களை குளிப்பாட்டி விடுவதற்கென, பிரத்யேக மிஷினை, அந்நாட்டைச் சேர்ந்த,'சயின்ஸ்' என்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்ப டுத்தி உள்ளது. ஒசாகாவில் நடந்த உலகக் கண் காட்சியில் இந்த மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை இந் திய மதிப்பில், 3.2 கோடி ரூபாய்.

ஏ. ஐ.,எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கக்கூடிய வகையில் இந்த மிஷின் வடிவமைக் கப்பட்டு உள்ளது. இது,'ஸ்பா'வில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதுடன், அதன் நவீன நீர் பாய்ச்சும் திறன், நுண் ணிய,'ஷவர்' மூலம் உடலை பளபளவென சுத்தப்படுத்திவிடும்.ஏ.ஐ.,இருப்பதால், பயனரின் தோல் வகை மற்றும் உடல் அளவீடுகளின் அடிப்படையில் எப்படி குளிப்பது சிறந்தது எனக் கண்டறிந்து, அதற்கேற்ற குளியலை அமைத்து கொடுக்கும். குளிக்கும் போதே உள்ளே இருக்கும் திரையில், வீடியோக்களையும் பார்க்கலாம்.

குளிப்பதற்காக மிஷின் கண்டுபிடிக்கப்படுவது,இது முதன்முறை அல்ல.1970ல், ஒசாகாவில் நடந்த உலகக் கண்காட்சியில், சான்யோ எலக்ட்ரிக் கோ' என்ற நிறுவனத்தால் இதே போன்று ஏற்கனவே ஒரு மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை முன்மாதிரியாக வைத்தே தற்போதைய நவீன மிஷின் உருவாக்கப்பட்டு உள்ளது.

செயல்படும் முறை

குளிக்க செல்லும் நபர், பிரத்யேக மாக வடிவமைக் கப்பட்ட 7.5 அடி நீளமுள்ள இயந்திரத்தில் படுக்க வேண்டும்.

நுண்ணிய ஷவர் மூலம் உடலை மிஷின் மெதுவாக சுத்தப்படுத்தும்.

மிஷினில் உள்ள 'சென்சார்'கள், பயனரின் உடல் தன்மையை கண் காணித்து, அதற் கேற்றுவாறு குளிப்பாட்டும்.

குளிக்கும் போதே ரிலாக்சாக வீடியோ பார்க்கலாம்.

குளித்த பின், பயனரின் உடலை தானாகவே மிஷின் உலர வைக்கும். 

இந்த முழு அனுபவமும், வெறும் 15 நிமிடங்களில் முடிவடையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News