கேரட் சூப்!
தேவையானவை -
கேரட் - 3. பெரிய வெங்காயம் 1, இஞ்சி - சிறு துண்டு, உப்பு தேவைக்கு, ஆலிவ் அயில் அல்லது வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், மிக்ஸட் ஹெர்ப்ஸ் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் கிடைக்கும்) - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், பாதாம் பருப்பு-3, புதினா - சிறதளவு.
செய்முறை-
வாணலியில் ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வாசம் வரும்வரை வதக்கவும். அத்துடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த கேரட் விழுதைப் போட்டு வதக்கவும். ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் தண்ணீரையும் சேர்த்துக் கலந்துவிட்டு, கொதிக்கவிடவும். கெட்டியாக வரும்போது மிக்ஸட் ஹெர்ப்ஸ், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைக்கவும். பாதாம் பருப்புகளைத் தோல் உரித்துப் பொடியாக நறுக்கி சூப்பில் போடவும். புதினா இலைகளைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிக்ஸ்டட் ஹெர் ப்ஸ் கிடைக்காவிட்டால், மிளகு தூள் மட்டும் சேர்த்துக் கலக்கலாம்.
0
Leave a Reply