தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள் செய்யும் போது…
எந்த வகையான அசைவ உணவு சமைத்தாலும் கழுவும் போது சமையல் வினிகர் கொஞ்சம் மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்த்து கழுவிய பின் பிசைந்து வைத்தால் வீட்டில் வாடை வராது.
தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள் செய்யும் போது கடுகு வெந்தயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து கடைசியாக தூவி கிளிறி இறக்கினால் சீக்கிரம் கெடாது.
அசைவ உணவு சாப்பிடும்போது எலுமிச்சம்பழத்தை நான்காக நறுக்கி வெங்காயத்தையும் வைத்து கொண்டு சாப்பிட்டால் சாப்பிடும் போது திகட்டாது.
தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.
பாலை கொதிக்க விடாமல் லேசாக சூடாக்கி, ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்பாலில் கரைத்து பின்னர் உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.
வற்றல் குழம்பு செய்யும்போது, தாளித்த எண்ணெய் பிரிந்து மேலேவரும் வரை கொதிக்க விட வேண்டும்.
0
Leave a Reply