பாதாம் அல்வா
தேவையான பொருட்கள்: சர்க்கரை-400 கிராம், பாதாம் பருப்பு-200 கிராம், நெய்-400 கிராம்,குங்குமப்பூ-1கிராம்,லெமன் எல்லோ பவுடர் - 1 சிட்டிகை,ஏலக்காய் - 5 கிராம்
செய்முறை: பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு2 நிமிடங்கள் கழித்து, அவைகளை உரித்து பின்பு தண்ணீரில் 2.3 முறை அலசி எடுத்துக் கொள்ளவும் அலசிய பாதாம்பருப்புகளை100 மி.லி தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்பு அடுப்பில் வாணலியை ஏற்றி அதில் பாதாம் பருப்பு விழுது,சர்க்கரையைப் போட்டு நன்றாக உருட்டும் பதம் வரை கிளற வேண்டும். பின்பு வாணலியைக் கீழே இறக்கி பாதாம்பருப்புவிழுது, சர்க்கரை கலவையில் நெய்விட்டுக் கிளற வேண்டும். அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் கிளறினால் அல்வாவின் நிறம் மாறி வரும் என்பதால் தான் வாணலியை இறக்கிய பின்பு நெய் ஊற்றிக் கிளற வேண்டும். நெய்விட்டு நன்கு கிளறிய பின்பு அந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். பின்பு அதில் ஏலப்பொடி, குங்குமப்பூ போட வேண்டும்.
0
Leave a Reply