25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலை ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்க…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலை ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்க…

பாலை லேசாக சூடுபடுத்தி அதில் அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு அதில் தயிருக்காக உறை ஊற்றி 8 மணி நேரம் கழித்து பார்த்தால் கெட்டித்தயிராக இருக்கும்.

குக்கரில் பருப்பு வேகவைக்கும் போது, நேரடியாக குக்கரை பயன் படுத்த வேண்டாம். முதலில் பருப்பை திறந்த பாத்திரத்தில் வேகவைத்து அதில் உள்ள நுரையை நீக்கவும். இந்த நுரைகாரணமாக, யூரிக் அமிலம் அதி கரித்து மூட்டு வலி ஏற்படுகிறது.

கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து பால் கலந்து செய்தால், நல்ல மணத்துடன் இருக்கும். அதில் பேரீச்சை, அன்னாசி பழங்களையும் வெட்டிப்போட்டு பழக்கேசரி செய்தால் சுவையும், சத்தும் கூடும்.

புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை எப்பொழுதும் தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. கழுவி நன்கு ஃபேன் காற்றில் காய வைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும், ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்

நீங்கள் கடலை எண்ணெயை பயன்படுத்துவது உண்டு என்றால் முட்டை வேக வைக்கும் பொழுது நாலைந்து சொட்டுகள் கடலை எண்ணெய் சேர்த்து கொஞ்சம் கல் உப்பு போட்டு வைத்தால் போதும் முட்டையை வேக வைத்த பின் பிரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விட முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News