ஸ்வீட் கார்ன் கட்லட்
தேவையான பொருட்கள்-
1கப் ஸ்வீட் கார்ன்,
1கப் உருளைக்கிழங்கு வேகவைத்தது,
1டேபிள்ஸ்பூன் கடலை மாவு,
1கப் நறுக்கிய வெங்காயம்,
3பச்சை மிளகாய்,
1கப் சோளமாவு,
1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
சிறிதுகொத்தமல்லி இலை,
சிறிதுகறிவேப்பிலை,
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்,
1/2டீஸ்பூன் கரம்மசாலா தூள்,
1டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு.
1 கப் பிரெட் தூள்.
தேவையான அளவுஉப்பு, எண்ணெய்.
செய்முறை -
ஸ்வீட் கார்ன் முத்துகளை உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவை,வாணலியில் லேசாக வறுத்து கொள்ளவும்.வேகவைத்த சோளத்தில், ஒரு ஸ்பூன் அளவு மட்டும் தனியே வைக்கவும். மீதிஇருக்கும் சோளத்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
ஒரு பவுளில் அரைச்சு ஸ்வீட் கார்ன் பேஸ்ட் எடுத்து, அதில் வேக வைத்து மசித்தஉருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி, கறிவேப்பிலை, வறுத்த கடலை மாவு, சோளமாவு சேர்த்துபிசைந்து கொள்ளவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா, எலுமிச்சை சாறு (1ஸ்பூன்), உப்பு,ஏற்கனவே தனியாக வைத்துள்ள கார்ன், என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகமசித்து கொள்ளவும். பின் தேவையான வடிவில் உருட்டி கொள்ளவும்.
உருண்டைகளை பிரெட் தூளில், இரண்டு பக்கமும் பிரட்டி, எண்ணெயில்,மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.
0
Leave a Reply