“லித்தியம்” வெள்ளை தங்கம்
மின்சார வாகனத்துக்கான பேட்டரி தயாரிப்பதற்கு லித்தியம் பயன்படுகிறது. இது'வெள்ளை தங்கம்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பெரிய அளவிலான லித்தியம் இருப்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 'சால்டன் கடல்' ஏரியின்கீழ்பகுதியில் காணப்படுகிறது எனவிஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியின் நீர்பிடிப்பு பரப்பளவு 21,700 சதுர கி.மீ. ஏரியின் கீழ் பகுதியில்1.8 கோடி டன் அளவு லித்தியம் உள்ளது.இது35.70 கோடி மின்சார வாகன பேட்டரி தயாரிப்பதற்கு சமம். இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் கோடி இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் .
0
Leave a Reply