“வெற்றி பயணம்” திட்டத்தின் கீழ் 286 பேருந்துகள் இயக்கம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், வெற்றி பயணம் திட்டத்தினை (02.10.2026) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் மகளிர் நலன் சார்ந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான வெற்றி பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மண்டலத்தில் விருதுநகர் கிளையில் 49 நகர மற்றும் 7 புறநகர் பேருந்துகளும், சாத்தூர் கிளையில் 37 நகர மற்றும் 9 புறநகர் பேருந்துகளும், அருப்புக்கோட்டை கிளையில் 32 நகர மற்றும் 14 புறநகர் பேருந்துகளும், சிவகாசி கிளையில் 30 நகர மற்றும் 9 புறநகர் பேருந்துகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையில் 29 நகர மற்றும் 3 புறநகர் பேருந்துகளும், இராஜபாளையம்-1 கிளையில் 30 நகர பேருந்துகளும், இராஜபாளையம்-2 கிளையில் 5 புறநகர பேருந்துகளும், காரியாபட்டி கிளையில் 18 நகர மற்றும் 4 புறநகர் பேருந்துகளும், வத்திராயிருப்பு கிளையில் 10 நகர பேருந்துகளும் என மொத்தம் 235 நகர மற்றும் 51 புறநகர் பேருந்துகள் என ஆக மொத்தம் 286 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஏற்கனவே மகளிர் பயணத்திட்டத்தின் கீழ் 222 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கூடுதலாக 51 சாதாரணக் கட்டண புறநகர் பேருந்துகள் மற்றும் 13 எக்ஸ்பிரஸ் நகரப் பேருந்துகள் என மொத்தம் 64 பேருந்துகள் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் 368 புறநகர் பேருந்து தனி நடைகள் வெற்றிப்பயணம் திட்டத்தில் கூடுதலாக இயக்கப்படுகிறது.
இதன் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் நகர்ப்புற மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அன்றாடப் பயணச் செலவைக் குறைப்பதற்கும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக எளிதாகப் பயணம் மேற்கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்பு துறை) திரு.ச.தங்கவேல், விருதுநகர் மண்டல பொது மேலாளர்(தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்) திரு.கண்ணன், உதவி மேலாளர்(வணிகம்) திரு.நாகராஜ், அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply