117 வீரர், வீராங்கனைகள் இந்திய அணியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பிடித்துள்ளனர் இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது
.இந்திய ஒலிம்பிக் அணி 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-த் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத் தப்படுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அணியினருடன் பயிற்சியாளர் கள், உதவிஊழியர்கள். அதிகாரிகள் உள்பட மொத்தம் 140 பேர் செல்லவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டி விதிமுறைப்படி ஒலிம்பிக் கிராமத்தில் வீரர், வீராங்க னைகள் தவிர்த்து பயிற்சியாளர், மருத்துவ அதிகாரிகள், உடல் தகுதி நிபுணர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் உள்பட 7 பேர் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்பட்டும் எது விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி காசு கூடுதலாக செல்லும் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் உள்ளிட்டோர் ,ஒலிம்பிக் கிராமத்துக்கு வெளியில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
0
Leave a Reply