தெற்காசிய ஜீனியர் தடகளத்தில் ஒரே நாளில் இந்தியாவிற்கு 19 பதக்கம்
தெற்காசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் 4வது சீசன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. தெற்காசிய ஜீனியர் தடகளத்தில் இதுவரை இந்தியா 12 தங்கம் 13 வெள்ளி 3 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கம் கைப்பற்றியது. நேற்று ஒரே நாளில் இந்தியா 9 தங்கம் உட்பட 19 பதக்கம் கைப்பற்றியது.
இந்தியாவின் அம்னத் காம்போஜ் 48.38 மீட்டர் வட்டு எறிதலில் வெள்ளி வென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் ரித்திக் 55.64 மீட்டர் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். ராம்ன் 51.22 மீட்டர் வெள்ளி வசப்படுத்தினார்.
பெண்களுக்கான 119 மீட்டர் தடை ஒட்டத்தில் இந்தியாவின் உன்னதி 13.93 வினாடி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். 0.03 வினாடி பின் தங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை சபிதா 13.96 மீட்டரில் வெள்ளி கைப்பற்றினார். இந்த இரண்டும் புதிய சாதனையாக அமைந்தது.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் நயன் பிரதீப் 14.14 வினாடி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
நீளம் தாண்டுதலில் இந்திய விரர் ஜித்தின் அர்ஜீனன் 7.61 மீட்டர் தூரம் தாண்டி, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீரர் முகமது அடா சாஜித் 7.43 மீட்டர் வெள்ளி கைப்பற்றினார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் பிரதிக் ஷா யமுனா 5.79 மீட்டர் லக்சன்யா 5.75 மீட்டர் முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.
நேற்று 10 பிரிவில் இந்தியா 9ம் பிரிவில் தங்கம் வென்றது . 9 வெள்ளி 1 வெண்கலம் என நேற்று மட்டும் இந்திய 19 பதக்கம் வசப்படுத்தியது.
0
Leave a Reply