அரசுப்பள்ளி மாணவர்கள் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR-Indian Institute of Chemical Technology) நடைபெற்ற 2 நாட்கள் ஜிக்யாசா(Jigyasa) உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் வேதியியலில் மிகுந்த ஆர்வம் மற்றும் கல்வியில் சிறந்த 100 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR-Indian Institute of Chemical Technology)) மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை இணைக்கும் விதமாக 2 நாட்கள் நடைபெற்ற ஜிக்யாசா(Jigyasa) உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.அதன்படி, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்(CSIR-Indian Institute of Chemical Technology) நிறுவனம் மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம்(CSIR- National Geophysical Research Institute), உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்(CCMB- The Centre for Cellular & Molecular Biology) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய 2 நாட்கள் நடத்திய உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி முகாமில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR- National Geophysical Research Institute) இயக்குநர் டாக்டர் பிரகாஷ்குமார் அவர்கள் "தாய் பூமி" மற்றும் பூமியின் இயற்கை செல்வத்தை ஆராய்வதிலும் பாதுகாப்பதிலும் புவி இயற்பியல் மற்றும் புவியியல் ஆய்வுகளின் முக்கியத்துவம் பற்றிய விரிவுரையுடன் நிகழ்வை துவக்கி வைத்தார். எதிர்கால சந்ததியினருக்கான நிலைத்தன்மை மற்றும் வள நிர்வாகத்தை உறுதி செய்வதில் பூமி அறிவியலின் முக்கிய பங்கை அவரது உரை வலியுறுத்தியது.
இரண்டாம் நாள், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(CSIR-Indian Institute of Chemical Technology) இயக்குநர் டாக்டர் சீனிவாச ரெட்டி அவர்கள், அன்றாட வாழ்வில் வேதியியலின் முக்கியத்துவம், ஆராய்ச்சிப் பணிகளின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CSIR-Indian Institute of Chemical Technology) பங்களிப்புகளை வலியுறுத்தும் வகையில் மாணவர்களிடம் உரையாற்றினார். மாணவர்கள் அங்குள்ள ஆய்வகங்களை பார்வையிட்டு, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி தங்களது கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றனர்.
இதன் மூலம் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விஞ்ஞானிகளிடம் நேரடியாக கேட்டு அறிந்து தெளிவு பெறுவதற்கும், அறிவியல் மனநிலை மற்றும் ஆராய்ச்சி மனப்பாங்கை வளர்ப்பதற்கும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
0
Leave a Reply