25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் 21 வயது இளைஞர்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் 21 வயது இளைஞர்கள்!

இந்தியாவில் பணக்காரர்கள் என்றால் நமக்கெல்லாம் உடனே நினைவுக்கு வருபவர்கள் அம்பானி மற்றும் அதானி தான். இவர்களைத் தவிர்த்து சில தொழில்துறை நிறுவனர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள்‌. ஆனால் 21 வயது மற்றும் 22 வயது நிரம்பிய இரண்டு இளைஞர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், இந்த வருடம் இரண்டு இளைஞர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிக்கைப்படி கவுதம் அதானி இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தையும், முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மருந்து மாத்திரைகள் கூட எளிதாக கிடைத்து விட்டது. ஆனால், மளிகை சாமான்கள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இதனை மனதில் வைத்து2021 ஆம் ஆண்டில் மும்பையில் உதயமானது தான் ஜெப்டோ(Zepto) எனும் விரைவு வணிக செயலி. இதன் நிறுவனர் பெங்களூரைச் சேர்ந்த21 வயதே ஆன இளைஞர் கைவல்யா வோரா, தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் செயலியின் பங்குதாரர்22 வயதான இளைஞர் ஆதித் பலிச்சா தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களாக இருந்து, பாதியில் படிப்பை கைவிட்டவர்கள்.கொரோனா காலத்தில் வீட்டிற்கே மளிகை பொருள்களை கொண்டு சேர்க்கும் தேவை அதிகமாக இருந்தது. ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஜியோ மார்ட் உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் செயலிகள் இருந்தாலும், இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அசுர வளர்ச்சியை அடைந்தது ஜெப்டோ நிறுவனம்.'கான்டாக்ட்லெஸ் டெலிவரி' தான் இந்தச் செயலியின் அடிப்படை நோக்கம். இதற்கு ஏற்றாற் போல் ஜெப்டோ நிறுவனத்தை உருவாக்கி, மளிகைப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு போய் சேர்த்தனர் இந்த இரண்டு இளைஞர்கள்.

மூன்றே ஆண்டுகளில் இந்தியா முழுக்க அசுர வளர்ச்சியை அடைந்ததன் விளைவாக பல கோடி லாபத்தை ஈட்டியுள்ளது ஜெப்டோ நிறுவனம். இதன் காரணமாகத் தான் இளைஞர்கள் இருவரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் கைவல்யா வோராவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3,600 கோடி, பங்குதாரர் ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.4,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளன. இளைய கோடீஸ்வரர் பட்டியலில் இவர்கள் இருவரும் முதலிரண்டு இடங்களைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.தொழில் முனைவோருக்கான ஆர்வமும், புதிய யுக்தியும் இருந்தால்எதையும் சாதிக்கலாம் என்பதற்குஉதாரணமாக இந்த இரண்டு இளைஞர்கள் திகழ்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News