ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் 51ஆவது ஆண்டு விளையாட்டு தினவிழா.
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் 51 ஆவது பொன்விழா ஆண்டு விளையாட்டு தின விழா கல்லூரி மைதானத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலர் சிங்கராஜ் தலைமை உரையாற்றினார்.
விழாவினுடைய சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருது, ஆசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற திருநெல்வேலி தமிழ்நாடு மின்சார வாரிய மூத்த விளையாட்டு அலுவலர் மணத்தி கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்த அளவிற்கு முன்னேற காரணம் என்றால் விளையாட்டின் மீதான எனது ஆர்வம் அர்ப்பணிப்பும் தான். விளையாட்டின் மூலம் நமது திறமையை வளர்த்து நமது கிராம மண்ணின் பெருமையை உலகறிய செய்யலாம். பல திறமைகளை கொண்டுள்ள நீங்கள் இன்னும் பல பயிற்சிகளை பெற்று சாதனை பெற வேண்டும் என்று வாழ்த்து கூறினார். சீருடை அணிந்த தேசிய மாணவர்களின் படை அணிவகுப்பு நடைபெற்றது. ஆண்களுக்கான ஒட்டுமொத்த மொத்த சாம்பியன் பட்டத்தை பாரதியார் அணியும், பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை காவேரி அணியும் வென்றது. தனிநபருக்கான சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மணிகண்டன், பெண்கள் பிரிவில் பாப்பாத்தி ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த கல்வி ஆண்டின் விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் வாசித்தார். விழாவின் நிறைவாக உடற்கல்வி உதவிப் பேராசிரியை அபிநயா நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் பழையபாளையம் மகமை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply