25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிய உதவும் கருப்புப் பெட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிய உதவும் கருப்புப் பெட்டி .

விமான விபத்துகள் நடைபெற்ற பிறகு அது எப்படி நடந்தது? என்னகாரணம்? போன்ற தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிற கருப்புப் பெட்டி பற்றி… 

 

விமானத்திற்குள் தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில் நுட்பக் கருவி கருப்புப்பெட்டி என்று அழைக்கப்படுகிறது.

 

இது விமானம் விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங் களை அறிவதற்கும், ஆராய்வதற்கும் பயன்படுகிறது.

 

இக்கருவி விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.

 

இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. 

 

இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று, விமானம் தரையிறங்கும் கடைசி 2 மணி நேரத்தில் விமானிகளுக்கும். தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.

 

மற்றொரு பகுதி, விமானத்தின் வேகம், விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணங்களை பதிவு செய்யும்.

 

விமானம் தண்ணீரில் விழுந்தாலும், தீயில் எரிந்தாலும் கருப்புப் பெட்டியில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.

 

இக்கருவி டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்டது.

 

இந்தக் கருப்புப்பெட்டி, புவி ஈர்ப்பு விசையை விட 3 ஆயிரம் மடங்கு அதிக விசையையும், ஆயிரம் டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News