விண்வெளியில் ஒரு தங்கச் சுரங்கம்.
விண்வெளியில் சுற்றித் திரியும் 16 சைக்கி (16 Psyche) என்ற விண்கல், உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடக்கூடிய ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த விண்கல், வெறும் பாறைகளால் ஆனது அல்ல; இது தங்கம், இரும்பு மற்றும் நிக்கல் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் நிறைந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் $700 குவிண்டில்லியன் ($700 quintillion) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்செல்வம் முழுவதையும் பூமிக்குக் கொண்டு வந்து மக்களிடையே பகிர்ந்துஅளித்தால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒரு கோடீஸ்வரராக (Billionaire) மாற முடியும் என்பது வியக்கத்தக்க உண்மை. தற்போது நாசா (NASA) இந்த விண்கல்லை ஆய்வு செய்யத் தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது, இது எதிர்காலத்தில் விண்வெளி சுரங்கத் தொழிலுக்கு (Space Mining) ஒரு புதியவாசலைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply