விளைச்சல் நன்றாக இருக்க நல்ல ஒரு உரம்
செடிகளுக்கு எல்லாம் நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தியது போக மீதி இருக்கும் காய்கறி கழிவுகளே நல்ல ஒரு இயற்கையான உரம். இவைகளை அப்படியே காய வைத்து உரமாக கொடுத்தாலும் அல்லது தண்ணீரில் போட்டு நொதிக்க விட்டு அதை தண்ணீருடன் கலந்து தெளித்தாலும் இந்த தண்ணீரில்அத்தனை சத்துக்கள் உள்ளது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளை வைத்து தான் மிக மிக எளிமையாக இந்த உரத்தை தயார் செய்யலாம்.
இந்த உரம் தயாரிக்க 50 கிராம் கடுகு இருந்தால் போதும், 30 செடிகளுக்கு இதை பயன்படுத்தி உரம் கொடுக்கலாம். முதலில் கடுகை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து வைத்து இந்த பவுடரை அரை லிட்டர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும். இதை அப்படியே கலந்து கொடுக்கக் கூடாது.
இந்த கடுகு உரத்தை கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரை லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து வைத்து, இந்த தண்ணீர் நன்றாகநொதித்து நுரை பொங்கி இருக்கும். அதன் பிறகு இந்த தண்ணீரை5 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்தத் தண்ணீரை செடிகளுக்கு ஸ்பிரே போல அடித்து விட வேண்டும். வேர்களுக்கு இந்த தண்ணீரை ஊற்றும் போது மண்ணில் கலந்து நல்ல ஒரு உரமாக மாறும்.இந்த உரத்தை தெளிப்பதற்கு முன் செடிகளில் உள்ள பழுத்த இலைகள், பூச்சி அரித்த இலைகள் ஆகியவற்றை நீக்கி விட வேண்டும். அது மட்டுமின்றி செடிகள் பூத்து முடித்துஇருந்தாலும் ,காய்கறி செடிகள் காய் வைத்து முடித்து இருந்தாலும், அதன் முனைகளை எல்லாம் நறுக்கி எடுத்து விட்ட பிறகு, இந்த உரத்தை ஊற்றினால் ,அடுத்த விளைச்சல் மிகவும் நன்றாக இருக்கும்.
0
Leave a Reply