லாபகரமான மாடித்தோட்டம்
மாடித்தோட்டத்தில் காய்கறிச் செடிகளை வளர்க்க, வெயில் கிடைக்கும் இடமாகப் பார்த்துத் தோட்டம் அமைக்க வேண்டும். காய்கறிச் செடிகள் வளர்க்கக் கற்றுக் கொண்டால்வீட்டின் காய்கறிச் செலவைகணிசமாகக்குறைக்கும்.இயற்கை விவசாயத்தில் விளைந்த, ரசாயனமற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்' என்கிற விருப்பம் மக்களிடையே பெருகிவருகிறது. ஆனால், இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை வாங்குவதும் பெறுவதும் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இதற்காகத்தான் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தைச் செயல்படுத்திவருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கான இட வசதி பெரிதாக இருப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் வளர்க்க வேண்டிய சூழலும் உள்ளது.
குறுகிய இடத்தில். மாடித் தோட்டத்தை லாபகரமானதாகச்செய்ய வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைக்கும். காய்கறிகளின் விளைச்சல், நம் வீட்டின் செலவைகணிசமாகக் குறைப்ப தோடு, இயற்கையானகாய்கறிகளைச் சாப்பிடக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். காய்கறிச் செடிகள் வளர்க்கும்போதுதான் மாடித்தோட்டத்தின்நோக்கம் பூர்த்தியாகும்..வீட்டுத் தோட்டத்தில் வெண்டை, கத்தரி, சீனி அவரை, பச்சை மிளகாய், தக்காளி, வகைக்கு 10 செடி வைத்தாலே வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் தாராளமாகக் கிடைக்கும். மருந்து அடிக்காத ரசாயன உரம் இல்லாத காய்கறிகள், செலவும் மிச்சம். கீரைவகைகளும் மல்லி, பாலக்கீரை, பொன்னாங்கன்னி, புதினா, பசலைக்கீரை,வல்லக்கீரை எளிதாக வளர்க்கலாம். முருங்கை, எலுமிச்சை பயிர் செய்யலாம்.
0
Leave a Reply