25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தன் உடலை விட 6 மடங்கு பெரிய இரையை வேட்டையாடும் சிலந்தி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தன் உடலை விட 6 மடங்கு பெரிய இரையை வேட்டையாடும் சிலந்தி.

தென் அமெரிக்காவில் விஞ்ஞானிகள், வியக்க வைக்கும் வேட்டையாடும் திறன் கொண்ட ‘பிங்க் ஃப்ளாய்ட்’ எனப் பெயரிடப்பட்ட புதிய சிலந்தி இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

வெறும் 3 முதல் 4 மில்லிமீட்டர் அளவே கொண்ட இந்தச் சிறிய சிலந்தி, எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், வண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பூச்சிகளை வேட்டையாடி உணவாகக் கொள்கிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தன் உடல் அளவை விட சுமார் 6 மடங்கு பெரிய இரையையும் பிடித்து உணவாக்கும் திறன் இந்தச் சிலந்திக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய சிலந்தி இனத்தின் பரிணாம வளர்ச்சி, வாழ்வியல் பண்புகள் மற்றும் மரபணு தன்மைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து டி.என்.ஏ. ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வளவு சிறிய உடலில் இவ்வளவு வலிமையான வேட்டையாடும் திறன் இருப்பது, இயற்கை உலகின் வியப்பூட்டும் ரகசியங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News