மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம்.
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் இராஜபாளையத்தில் 8.10.26 & 9.10.26 ல் நடைபெற்றது.
திருமதி. K.திலகம் மாவட்ட சமூகநல அலுவலர் வரவேற்புரை ஆற்றினார்.
திரு.V. ராமலிங்கம், கூடுதல் காவல் கண்கானிப்பாளர், திரு. பொன்பாண்டியன், முதல் நிலைக் காவலர் ஆகியோர் டிஜிட்டல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
திருமதி. சுகந்தி, உதவிக்கருவூல அலுவலர் ஓய்வூதியத்தொகை திட்டம் பற்றி விளக்கினார்.
இரண்டாம் நாள் திரு. R.பாலசுப்பிரமணியன், முன்னோடி வங்கி (IOB), வங்கி சேவைகள் பற்றிய விளக்கங்களைக் கூறினார்.
திரு. M.R.வெங்கட்ட நாராயண ராஜா, நிதி ஆலோசகர், LIC, முதலீடு, சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய விளக்கங்களை கூறினார்.
திரு.ஃபிலிப் மில்டன், மாவட்ட திட்ட மேலாளர், சிறு தொழில்கள் தொடங்குவது, கடனுதவி, மானியம் போன்றவற்றை விளக்கினார்.
திருமதி.S.தாரணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையாற்றினார்.
முகாம் ஏற்பாடுகளை REWA வின் தலைவர், செயலாளர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
0
Leave a Reply