வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்து அவர்களது ஆதார் எண்ணை பெற்று வாக்காளார் விபரங்களுடன் இணைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணினை இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணினை தேசிய வாக்காளர் சேவை இணையதளம்(http://www.nvsp.in), வாக்காளர் உதவி செயலி அல்லது வாக்காளர் இணைய தளம் https://voterportal.eci.gov.in ஆகியவற்றின் மூலம் தாங்களே ஆதார் எண்னை இணைத்துக்கொள்ளலாம்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்- 6டீ-ல் வாக்காளர்களது ஆதார் எண்ணினை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.
வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணானது பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்படாது. ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6B –ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S,, கேட்டுக்கொள்கிறார்.
0
Leave a Reply