ஆடிப்பூர தேர் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஏற்பாடுகள்
வருகிற ஆடி மாதம் 7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடத்து வருகின்றன.
ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா வருகிற 30-த்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.. இதையடுத்து ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி கருட சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 2-ந்தேதி ஆடிப்பூரத்தன்று நடைபெறுகிறது. இதற்காக ஆண்டாள் கோவில் முன்பு பிரமாண்ட பந்தல்.,கீழரத வீதியில் நிற்கும் தேருக்கு அலங்கார பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தேர் வலம் வரும் நான்கு ரத வீதிகளிலும் நெடுஞ்சாலை துறையினர் சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். தேரோட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
0
Leave a Reply