இயற்கை விவசாயத்தில் அடையார் ஆனந்தபவன்.A2B
இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும்60க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டA2B அடையாார் ஆனந்தபவன் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உணவத்தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர், எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றMR.ஸ்ரீனிவாசராஜா, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில்10 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.இராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தாத்தா, அப்பா, எல்லாம் விவாசாயிகள், இராஜபாளையத்தில்90 ஏக்கர் பரப்பளவில் நாலு தலைமுறையாக மா, தென்னை, விவசாயம் செய்கின்றனர். சின்ன வயசிலேயே விவசாயம் பழக்கப்பட்ட ஒன்று. தொழில் காரணமாக சென்னைக்கு வந்தாலும் ஊரில் இருக்கிற இடத்தில் தொடர்ந்து விவசாயம் செய்கின்றனர்.
10 ஏக்கர் நிலம் வாங்கி வீட்டு பெண்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். பராமரிப்பு பணிகளை அவர் கவனித்துக் கொண்டாலும், நிர்வாகச் செலவுகள் அனைத்தையும் வீட்டுப் பெண்கள் தான் நிர்வகிக்கிறாார்கள். இந்த தோட்டத்தில்100 தென்னை மரங்களும்,100க்கும் அதிகமான மரங்களும் இருக்கின்றன., அல்போன்சா, கிளிமூக்கு, பங்கணப்பள்ளி, பஞ்சவர்ணம், ஆகிய ரகங்கள் மா மரங்கள் செழிப்பாக காய்க்கிறது. ரசாயன இடு பொருள்கள் போடாமல், இயற்கை முறையில் உற்பத்தி செய்வதினால் இங்கு விளையக்கூடிய மாம்பழங்கள் கூடுதல் சுவையோடும், வாசனையோடும், இருக்கும். ஒவ்வொரு வருஷமும் மாம்பழசீசன் சமயத்துல, அறுவடை செய்யும்.பழங்கள்உறவினர்கள், நண்பர்களக்குப் பங்கிட்டு கொடுத்த பிறகு, அவர்கள் நடத்தக்கூடிய அங்காடிகள் மூலம் விற்பனை செய்கின்றனர். இந்த தோட்டத்திலேயே மாட்டுப் பண்ணை அமைத்து, கிர், இந்தி இனங்களைச் சேர்ந்த40 க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கின்றனர்.
இயற்கை விவசாயம் செய்ய, மாடுகள் ரொம்ப அவசியம், இதன் கழிவுகளால் தான் இந்தத் தோட்டத்தில் உள்ள பயிர்கள் எல்லாமே நல்லா செழிப்பாக வளரும், மாடுகளுக்கு கடலைப் புண்ணாக்க, தவிடு, பருத்திக்கொட்டை, உள்ளிட்ட அடர் தீவணமும், அதோடு பசுந்தீவனமும் கொடுக்கின்றனர். மாடுகளை இயற்கையான முறையில் மேய விட்டு வளர்த்தால் தான், நோய், நொடிகள் இல்லாமல் ஆராக்கியமாக வளரும். அதனால் காலையில் பால் கறந்ததுமே, கொட்டைகையில் இருந்து வெளியேற்றி, மேய விட்டு, தோட்டம் முழுக்கக் காலாற நடந்து போய் சாயந்திரம் வரைக்கும் மேயும், இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுது. மாடுகளோட சாணமும், சிறுநீரும், நிலத்துல விழுந்து மண்ணு நல்லா வளமாகி கிட்டே இருக்கிறது. சாயந்திரம் ஆகிவிட்டால் மாடுகளைப் பிடிச்சிட்டுவந்து பால் கறந்து, கன்றுகள் குடித்த பால் போக மீதிபாலை, கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்கின்றனர். தினமும் சுமார் 100 லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். பாசனத்திற்கு திறந்த வெளிக் கிணறும்,250 அடி ஆழம் கொண்ட இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் இருக்கின்றது.
0
Leave a Reply