25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அஜித்துக்கு மினியேச்சர் ரேஸ் கார் பரிசு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஜித்துக்கு மினியேச்சர் ரேஸ் கார் பரிசு.

லண்டனில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் பங்கேற்ற அஜித் அணியை, போட்டிக்கு முன்பாக தமிழக முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது அஜித்தின் ரேஸ் காரின் மினியேச்சர் மாடலை அவருக்கு விஜய் பரிசாக வழங்கினார். அதில், ‘என் அன்பான சகோதரர் அஜித்துக்கு’ எனக் குறிப்பிட்டு, ‘பிரியமுடன் விஜய்’ என ஆட்டோகிராப் செய்திருந்தார். பதிலுக்கு அஜித்தும் தனது ஹெல்மெட்டை விஜய்க்கு பரிசாக வழங்கினார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே, அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் விஜய் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். லண்டன் ரேஸ் போட்டி முடிந்த பிறகு, அஜித் மற்றும் விஜய் இணைந்து எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த ஜி.வி. பிரகாஷ், ‘இரு பெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி’ எனப் பதிவிட்டிருந்தார். மேலும், ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியிருந்தார்.

அவர் இருவரது படங்களுக்கும் இசையமைத்ததை குறிப்பிட்டாரா அல்லது ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவதை சுட்டிக்காட்டினாரா என்பது விரைவில் தெரியவரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News