25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப    உறுப்பினர்கள் அனைவரும் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற ஏழை எளிய குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்களின் மரணத்தால் அல்லது ஏதாவது உடல் உறுப்பு இழப்பால் நிரந்தர வருவாய் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இப்பேரிழப்பிலிருந்து காப்பீடு செய்தவர் அல்லது குடும்பத்தினர் மீளவும், தொடர்ந்து தொழில்கள் புரிந்திடவும் காப்பீடு உதவுகிறது.

ஆதலால் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சமுதாய பாதுகாப்பு பயன்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு PMSBY, PMJJBY, CMCHIS, PMJAY  மற்றும் APY ஆகிய காப்பீட்டு திட்டங்களில் தகுதியுள்ள அனைத்து சுய உதவிக் குழு உறுப்பினர்களும் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மே 2025-ம் மாதத்திற்குள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News