பாதாம் பால் நன்மைகள்
பாதம் பாலில் நிறைந்துள்ள பண்புகள் ஆரோக்கியத்தில்நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாதாம் வைட்டமின்E இன் சிறந்த ஆதாரமாகும். இது செல்களின் மீளுருவாக்கத்திற்கும், சூரிய கதிர்களால் சேதமடைந்த சருமத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
பாதாம் பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. இதனுடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
இது தாவர அடிப்படையிலானது என்பதால், வேகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு ஏற்றது. இதை பசும்பாலுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.
100 மில்லி பாதாம் பாலில்30 முதல்55 கலோரிகள் வரை இருக்கும். மற்ற பாலுடன் ஒப்பிடுகையில் பாதாம் பால் குறைவான கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.
பாதாம் பாலில் வலுவூட்டப்பட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்துக்கள் மிகவும் முக்கியமானவை பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு பாதாம் பால் ஒரு சிறந்த மாற்று உணவாக இருக்கும்.
நட்ஸ் வகைகளில் உள்ள நல்ல கொழுப்புகள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.இந்நிலையில் அதிக அளவு வைட்டமின்E மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாம் பால் இதயத்திற்கு நன்மை தரும்.
0
Leave a Reply