கற்றாழை ஜூஸ்
தேவையான பொருட்கள்: -
கற்றாழை இலை - 1
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
லெமன் ஜூஸ் - 1-2 டீஸ்பூன்
செய்முறை-
கற்றாழை மடலின் செடியில் இருந்து பறித்த பிறகு, சிறிது நேரம் வைத்தால் அதிலிருந்து மஞ்சள் நிறதிரவம் வெளியேறும். இதை தவறாமல் செய்யவும்.
கற்றாழை இலையின் ஓரங்களை வெட்டி, நடுவே உள்ள கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். இதை செய்வதற்கு ஸ்பூனை பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்லை ஒரு மிக்சர் ஜாரில் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
லெமன் ஜூஸ் சேர்ப்பதை தவிர்க்க வேண்டாம்.
இப்போது தயாராக உள்ள கற்றாழை ஜூஸை ஃபிரஷ்ஷாக குடித்து மகிழுங்கள்.
கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸôகக் குடிப்பது பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
0
Leave a Reply