பாரிஸ் ஒலிம்பிக்கில் சீறிப்பாய்ந்த அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ்
பாரிஸ் ஒலிம்பிக்கின் ஹலைட்டாக ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் நடந்தது. பைனலில் பங்கேற்ற 8 பேரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஓட, விறுவிறுப்பு அதிகரித்தது. அனைவரும் லைனை எட்ட, ரசிகர்கள் குழப்பமமைந்தனர். பின் போட்டோ பினிஷ் முறையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
லேன் 7-ல் புயல் வேகத்தில் ஓடிய அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (9.784 வினாடி) முதலிடம் பெற்று தங்கம் வென்றார். லேன் 4ல் ஒடிய ஐமைக்காவின் கிஷேன் தாம்சன் (9.789 வினாடி) வெள்ளி வென்றார். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 0.005 வினாடி, அதாவது ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பங்கு அமெரிக்காவின் பிரட், கெல்லி 9.82 வெண்கலம் கைப்பற்றினார்.
நோவா லைல்ஸ் கூறுகையில் நீ ஜெயித்து விட்டாய் என்று கிஷேனிடம் சொன்னேன். அவரது பெயர் முதலிடத்தில் வருவதை காண தயாராக இருந்தேன். ஆனால், தங்கம் வென்றதாக எனது பெயரை அறிவித்தனர். இதை நம்ப முடியவில்லை. என்றார். தங்கத்தை நழுவவிட்ட தாம்ப்சன் கூறுகையில் ஏமாற்றமாக இருக்கிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றார். 20 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் 100 மீட்டர்ஒட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 4 பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ்.
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் தங்கம் வென்றவர் இத்தாலியின் தாமஸ் செக்கான். வயது 23
0
Leave a Reply