25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அனிமல் பட நாயகி ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு ரூ.45 கோடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அனிமல் பட நாயகி ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு ரூ.45 கோடி

கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டை நகரில்1996 ஏப்ரல்5ம் தேதியன்று ராஷ்மிகா மந்தனா பிறந்தார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமய்யா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.2014ல் கிளீன் அண்ட் கிளியர் டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பட்டத்தை வென்றதையடுத்து பிரபலமானார்

2016ல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.கீதா கோவிந்தம், புஷ்பா என இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த அனிமல் படம் வெளியாகி அதிக வசூல் செய்து வருகிறது.

27 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு பெங்களூரில் ரூ.8 கோடி மதிப்புள்ள பங்களா, மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, கோவா, கூர்க் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன.இவரிடம் நவீன அம்சங்களுடன் கூடிய ஜெர்மன் எஸ்.வி.யூ. காரான ஆடி க்யூ3 உள்ளது. இது தவிர அவரது வீட்டில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் சிகிளாஸ், டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் க்ரெட்டா கார்களும் உள்ளன.

சினிமாவை தவிர்த்து, கல்யாண் ஜூவல்லர்ஸ், எப்சன் இந்தியா, ஒனிட்சுகா டைகர் மற்றும்7அப் போன்ற பிராண்டடு விளம்பரங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்.ஒவ்வொரு படத்திற்கும் சுமார்4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.45 கோடி இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News