வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் ஆண்டனி வர்கீஸ்..
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் ஆண்டனி வர்கீஸ். சமீபத்திய பேட்டியில் தனது தவறவிட்ட வாய்ப்பு குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
“விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. விஜய் சார் இப்போது முதல்வராகிவிட்டார். இனிமேல் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். அந்த வாய்ப்பை தவறவிட்ட வருத்தம் இப்போதும் அதிகமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply